Tuesday, July 26, 2011

நோய்களுக்கான காரணங்கள்

இக்காலத்தில் உடல்நலம் இல்லை என்றால் உடன் பெரிய மருத்துவ மனைகளுக்குச் செல்கிறோம்.  இருக்கவே இருக்கிறது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.  எனவே அச்சப்படுவதில்லை.  பெரிய பெரிய மருத்துவரைப் பார்க்கச் செல்கிறோம்.  ஆனால் இறைவன் என்னும் பெரிய மருத்துவரை உள்ளம் உருக முதலில் நினைக்க வேண்டும்.  முற்பிறவியில் அறிந்தோ அறியாமலோ ஏதாவது தவறு இழைத்து அதன் காரணமாக இப்பிறவியில் நோய் வந்திருந்தால் தவறைப் பொறுத்து நோயைத் தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்ட வேண்டும்.

முற்பிறவியில் பெரியவர்களையும் ஆசானையும் நிந்தித்து இருந்தால் துன்புறுத்தி இருந்தால் காச நோய் ஏற்படும்.

பிறர் உணவைத் திருடி மற்றவர்கள் பசியால் வாடுவதை வேடிக்கை பார்த்திருந்தால் இப்பிறவியில் உடல் இளைத்தே காணப்படும். 

பெரியவர்களைக் கொல்லுதல், பெண்களை அவமரியாதை செய்தல், மிகவும் தெரிந்தவர்களுக்கே விஷம் கொடுத்து அவர்களைக் கொல்லுதல் இப்படி கொடுஞ் செயல்களைப் புரிந்திருந்தால் வெண்குஷ்டம் வரும்.

பொய் சாட்சி கூறினால் முகத்தில் நோய் வரும்.

பிறர் சொத்தை அபகரித்தால் - அதுவும் கோவில் சொத்தை அபகரித்தால் மூலநோய் அவசியமாக வரும்.

நன்றி மறந்தால் - பிறர் மனைவியைத் தவறான கண்ணோட்டத்துடன் கண்டால் கண் நோய் ஏற்படும்.

பிறரைப் பற்றி இல்லாதது பொல்லாதது கூறி புறம்கூறுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தால் காது நோய் உண்டாகும்.

ஆசிரியரைத் தண்டித்தாலும் பிறர் உணவைத் திருடினாலும் நீரிழிவு நோய் வரும்.

காய்கனிகளைத் திருடினால் - மற்றவரை அவமானப் படுத்தினால் உடலில் புண்கள் உண்டாகும்.

இப்படி முற்பிறவியில் நாம் செய்த தவறுகளுக்குத் தண்டனையாக இப்பிறவியில் நோய்கள் உண்டாகின்றன என்று பெரியோர் கூறுகின்றனர்.  எனவே மருத்துவரைப் பார்ப்பதோடு இறைவனிடம் முறையிட்டு அறிந்தோ அறியாமலோ இப்பிறவியிலோ முற்பிறவியிலோ தவறுகள் செய்திருந்தால் மன்னிக்கும்படியும் அப்படிப்பட்ட தவறுகளை இனி செய்யாமல் தடுக்கும் படியும் இறைவனிடம் முறையிடுங்கள்.  இறைவன் மனமிரங்கினால் நோய்கள் உடனடியாகத் தணியும்.  இறைவனிடம் கையேந்துங்கள்.  அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.

ஆடி அமாவாசையின் சிறப்பு

தென்திசைக் காலத்தில் வருவது தான் ஆடி அமாவாசை.  பகலவன் வடக்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கும் நாள் தான் தை அமாவாசை.  அதே போல கதிரவன் தெற்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கும் காலம் தான் ஆடி அமாவாசை.  ஆடி அமாவாசை என்பது நமது முன்னோர்களை வழிபட மிக உகந்த நாள் ஆகும்.

முன்னோர் வழிவாட்டை விரதம் இருந்து காலையிலேயே துவக்கிவிட வேண்டும்,   நதிக்கரையோ கடற்கரையோ சென்று முன்னோர்களை வழிபட வாய்ப்பு கிடைத்தால் மிக நல்லது.  அல்லது ஒரு குளக்கரையையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்.  காலையில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பின்னர் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் மாலையிட்டு விளக்கேற்ற வேண்டும்.  ஒரு இலையைப் பரப்பி அதில் முன்னோர்கள் விரும்பி உண்ட உணவு வகைகளை வைத்து அவர்களுக்குப் படைக்க வேண்டும்.  பின்னர் காக்கைக்கு உணவு வைத்துவிட்டு .     -  மற்றவர்களுக்கு அந்த உணவை பிரசாதமாகக் கொடுத்து அதன்பின்வீட்டில் மூத்தவர் அந்த இலையில் அமர்ந்து உண்ண வேண்டும்.   சூரியனும் சந்திரனும் இணைந்து நிற்கும் நாள் தான் அமாவாசை.  எனவே தான் நம் தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோர்களை நாம் நினைக்க ஏற்ற நாள் அமாவாசைத் திருநாளே.  அதிலும் இந்த ஆடி அமாவாசை மிகச் சிறப்பான நாள் ஆகும்.

“ஐயா - ஆடி அமாவாசை அன்று எனக்கு முக்கியமான பணி உள்ளது.  எனவே செய்ய முடியவில்லை.  அமாவாசை வரும்போதெல்லாம் ஏதாவது பிற பணிகள் குறுக்கிடுகின்றன.  என்ன செய்வது”  என்று கேட்டார் ஒரு நண்பர்.    திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் கிராமம் உள்ளது.  அருகில் கூத்தனூர் உள்ளது.  சிறிது தூரத்தில் திருவீழிமிழலை என்னும் சிவத்தலம் உள்ளது.  இப்பகுதியில் உள்ளது தான் செதலபதி என்னும் ஊர்.  இங்கு முக்தீஸ்வரர் கோவில் என்று ஒரு கோவில் உள்ளது.  இந்த கோவிலில் என்ன விசேஷம் என்றால் இந்த இறைவனை சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் வணங்கியதாக வரலாறு உள்ளது.   எனவே இதை என்றும் அமாவாசைத் திருத்தலம் என்று அழைக்கிறார்கள்.  இத்தலத்தில் இராமபிரானே வந்து தன்னுடைய தந்தைக்கு எள்ளும் நீரும் இறைத்ததாக வரலாறு உள்ளது.  அப்படிப்பட்ட இடத்திற்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வாருங்கள் என என் நண்பரிடம் தெரிவித்தேன்.  நெருங்கி விட்டது ஆடி அமாவாசை.  எல்லோரும் முன்னோர்களை வழிபடுங்கள்.  பித்ரு தோஷத்திலிருந்து விமோசனம் பெறுங்கள்.

இறைவனை வலம் வரும் முறை

இறைவனை வலம் வரும் போது நமது இட்டப்படி வலம் வரக்கூடாது.
எந்தெந்த இறைவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் என நியதி உள்ளது.  இதோ அந்த நியதி

விநாயகர்               - 1 அல்லது 3 முறைகள்
கதிரவன்               - 2 முறைகள்
சிவபெருமான்          - 3,5,7 முறைகள் அதாவது ஒற்றைப்படை
முருகன்                - 3 முறைகள்
தென்முகக் கடவுள்     - 3 முறைகள்
அம்பாள்                - 4,6,8 (இரட்டைப்படை)
திருமால்               - 4 முறை
இலக்குமி              - 4 முறை
அனுமன்               - 11 அல்லது 16 முறைகள்
நவக்கிரகம்             - 3 அல்லது 9 முறைகள்
அரசமரம்               - 7 முறைகள்

நாக கவசம் - NAGA KAVASAM

பல பேர் சோதிடர்களிடம் போவார்கள்.  உங்களுக்கு நாகதோசம் உள்ளது.  எனவே நீங்கள் காளத்திக்குப் போங்கள் என்பார் ஒருவர்.  மற்றொருவர் வேறு ஊரைச் சொல்வார்.  நாகதோசம் உள்ளவர்கள் பயன்பெற நாகக் கவசம் இங்கே தரப்பட்டுள்ளது.

நாக தெய்வக் கவசத்தைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.  மனதில் நாகராசன்-நாகராணி ஆகியோரை நினைத்துக் கொள்ள வேண்டும். 

நாக தெய்வக் கவசத்தை நானும் பாடிப் பலன் பெறவே
பாகம் பெண்ணுருக் கொண்டானின் பாலன் கணபதி காப்பாமே.

வணங்கும் பக்தருக்கு அருளுகிற வளம் தரும் நாகராசாவே-நாகராணியே
இணக்கமுடனே கிழக்கினிலே எம்மைக் காப்பாய்
தெற்கினிலே சுணக்கமின்றிச் சுகந்தருவாய்
சோதி மறையும் மேற்கினிலே மணக்க வந்து காப்பாயே
வடக்கிலும் காத்து வளம் தருவாய்

தாயாய் வந்து காத்திடுவாய் தரணியில்
மேல் கீழ் ஆகாயம் நீயே
செல்வம்தனைத் தந்து நிலையாய் என்றும் காத்திடுவாய்
சேயாய் எம்மைப் பாராட்டி சிரசைக் காப்பாய்
நெற்றியோடு வாயைப் புருவ நடுவினையும்
வடிவுடன் கண்கள் தமைக் காப்பாய்

கன்னம் காது நாசியுடன் கன்னல் மொழிதரு நா பற்கள்
மின்னும் நாகராசாவே-நாகராணியே விரைந்து காப்பாய்
முகம் கழுத்தும் இன்னல் தீர்க்கும் எழில்கோவே இதமாய்க் காப்பாய்
தோள், கைகள் மின்னல் வேகம் உடையோய் நீ மேன்மையுடனே காத்திடுவாய்

முலைகள் மார்பு நெஞ்சினையும் முதுகு வயிறு நாபியையும்
இல்லையோ என்னும் இடுப்பினையும் இருப்பிடத்துடனே குறிகளையும்
நிலையில் உயர்ந்தோய் நீ காப்பாய்
நீள்தொடை முழந்தாள் ஆடுசதைமலையே
கால்நகம் கணைக்கால்கள் மகிழ்ந்தே காப்பாயே

எங்கள் உரோமம் நரம்பினையும்
எலும்பு தசைகளை இரத்தம்
திங்கள் இரவு உள்ளவரை தினமும் காப்பாய்
இரவு பகல் மங்கும் நேரம் மலர்நேரம் மருளும் நேரம் மகிழ்நேரம்
அங்கம் அனைத்தும் காப்பாயே அரவத்தேவே காப்பாயே

எட்டுத்  திசையிலும் காப்பாயே
எங்கள் பகையை அழிப்பாயே
துட்டப் பேய்கள் செய்வினைகள்
தொடாது ஓடச் செய்வாயே
பட்டுப்போகச் செய்கின்ற பிணிகள் எதுவும் அணுகாது
விட்டு விலகச் செய்வாயே
விடங்கள் ஏறாது அருள்வாயே

விண்ணவர் ஏத்தும் வேலவர்க்கும் விக்னம் அகற்றும் விநாயகருக்கும்
எண்ணிய கருமம் முடிக்கின்ற எங்கள் இறைவன் இறைவிக்கும்
புண்ணியம் சேர்க்கும் மாலவர்க்கும் பணிகள் புரியும் நல்லரவே
எண்ணியதெல்லாம் எமக்கு ஈந்து எங்கும் எதிலும் காப்பாயே

சொல்லிய பக்தன் இவன் செஞ்சொல் கவசம்
தினம் சொன்னால் நல்ல புத்திரப்பேறு தரும்
நாகதோசம் நீங்கிவிடும்,
இல்லற சுகமும் இயைந்து வரும்
எல்லா வளமும் மிகுந்து வரும்
வல்லன எல்லாம் கைகூம்
வாழ்வில் வளமும் பெருகிடுமே

Friday, January 21, 2011

இறைவன் திருப்புகழைப் போற்றுதல்

இறைவன் திருப்புகழைப் போற்றுதல்
இந்த க-யுகத்தில் நாம் பிறவிப் பெருங்கட-னைக் கடக்க ஒரு அற்புதமான உபாயம் உள்ளது.
இறைவனின் திருநாமங்களைப் போற்றிப் புகழ வேண்டும்.  முன்பெல்லாம் தவம் செய்வார்கள் - வேள்விகள் செய்வார்கள் - பூசைகள் செய்வார்கள்.  ஆனால் இந்த க-யுகத்தில் இறைவனை அடைய - பிறவிக்கடலை நீந்திக் கரை சேர - அதை விட எளிமையான வழி இறைவனின் திருநாமங்களைப் போற்றிப் புகழ்வது தான்.
சரி எப்படிச் சொல்ல வேண்டும் இந்த நாமங்களை.  அமைதியான காடாக இருந்தால் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக மனதில் உச்சரியுங்கள் இறைவன் திருநாமங்களை -திருப்புகழை.
ஆரவாரமான சூழ-ல் உள்ள நகராக இருந்தால் நீங்களும் வெட்கப்படாமல் குரல் ஓங்க உச்சரியுங்கள்.  கூச்சத்தைப் போக்கிவிடுங்கள்.  இறைவனின் திருநாமத்தைச் சொல்ல நமக்கு என்ன கூச்சம்.
நடனகோபாலநாயகி என்னும் மதுரை மாநகரம் தந்த மகான் - சொராஷ்ட்ர மொழியில் அருமையாகப் பாடி உள்ளார்.  அதன் தமிழாக்கத்தைத் தருகிறேன்.  படியுங்கள்.
நாளும் ஹரி பஜனை செய்க
நல்ல வழி இதுவே இவ்வுலகில் - ஸ்ரீ
அச்சுதா கோவிந்தா என்று அதனை
ஓங்கிய குர-ல் வெட்கத்தை விட்டு
உரக்க உச்சரிக்கப் புறப்படு.
ஆயிரம் திருநாமம் கொண்ட இறைவனின் புகழை
ஒரு திருநாமத்தையாவது கூறிப் படியுங்கள் - பாடுங்கள் - நினையுங்கள் - வந்தியுங்கள்
அப்படிச் செய்த மாத்திரத்தில் நீங்கள் நரக வேதனை தரும் இன்னல்களி-ருந்து விடுபடலாம்.
எத்தனை தவங்கள் செய்தாலும் பலனில்லை
இறைவனின் ஒரு நாமத்தைக் கூறினால் பாபங்கள் அழியும்
கணக்குளதோ வால்மீகி செய்த பாபங்களுக்கு
இராமநாமத்தின் மகிமையால் அவை யாவும் அழிந்தனவே
எழும் போதும் - அமரும் போதும் - நடந்திடும் போதும் - உறங்கும் போதும்
இறைவனைத் தொழும் எண்ணத்தை வளர்த்திடு
இறைவனின் திருநாமத்தைக் கூறு
இப்படி பலபல கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார் நடனகோபால நாயகி சுவாமிகள்.
இறைவன் இருக்கின்றானா என்று வினா எழுப்புவர்கள் ஏராளம் -
இறைவனைப் போற்றினால் எல்லா இடங்களிலும் இறைவன் இருந்து நம்மைக் காப்பான்.
தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று கூறிய பிரகலாதன் என்றும் வாழும் வரலாறு படைத்தான்.

Wednesday, November 10, 2010

AMAVASAI VELVI - PALAN

இன்று நான் சில தளங்களில் சென்று கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்த போது அமாவாசை வேள்வி பலன்கள் என்று ஒரு கட்டுரையை அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் தளத்தில் படித்தேன்.  மிக அருமையான கட்டுரை.  அதிலே முன்னோர்கள் வழிபாடு செய்யாததால் வரும் இன்னல்களைப் போக்கவும் இந்த வழிபாடு நடைபெறுவதாக உள்ளது.  எனவே இந்தத் தளத்தில் அவர்களுக்கு மிக்க நன்றி தெரிவித்து அந்தக் கட்டுரையைத் தருகிறேன்.  அருள்கூர்ந்து படித்துப் பயன் பெறவும்.

ஓம்சக்தி அமாவாசை வேள்வி-பலன்கள்

ஓம்சக்தி

அமாவாசை வேள்வி

1998 ஆண்டு ஆனி மாதம் முதல் நம் சித்தர் பீடத்தில் அமாவாசை தோறும் வேள்வி நடக்கிறது. ஓம் சக்தி மேடை
எதிரில் இந்த வேள்விப் பூசை நடக்கிறது.

பக்தர்கள் வரிசைப்படி அதர்வண பத்ரகாளி எனப்படும் பிரத்தியங்கரா தேவியை வலம் வர வேண்டும். அங்கே வேள்விக் குச்சியும், நவதானியமும் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு நம் அன்னையின் ஆலயத்தையும், பிரகாரத்தையும் சுற்றி வலம் வர வேண்டும்.

கருவறை அன்னையை தரிசித்து விட்டு வந்ததும், துளசியும், வேப்பிலையும் கொடுப்பார்கள். அவற்றை அங்கேயே சாப்பிட வேண்டும்.

ஓம்சக்தி மேடையையும், வேள்விக் குண்டத்தையும் நெருங்குவதற்கு முன்னால் நாலு கால் மண்டபத்திற்கு வரும் போதே கையில் உள்ள வேள்வி குச்சியையும், நவதானியத்தையும் கொண்டு தலையைச் சுற்றி வேள்வி குண்டத்தில் இட வேண்டும். அதுவும் எப்படி தெரியுமா?

வலமிருந்து இடப்புறம் நோக்கி மூன்று தடவை! இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மூன்று தடவை, நம் தலையைச் சுற்றி கழித்து யாககுண்டத்தில் போட வேண்டும்.  அந்த யாக குண்டத்தில் கலந்து கொள்வதில் பெரிய விசேஷம்  இருக்கிறது. அம்மாவே அங்கே வந்து அமர்ந்து கொண்டு நமக்கு தரிசனம் கொடுக்கிறார்கள்: வேள்விப் பூசைக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

ஏவல், பில்லி, சூனியம் துன்பங்களை வேரறுக்கும் சக்தி அந்த அதர்வண பத்ரகாளி!  எல்லாவற்றையும் அம்மா ஒரு காரணத்தை வைத்துத்தான் கொடுத்திருக்கிறார்கள்.

இறந்து போன தாய் தந்தையர்க்கும், முன்னோர்க்கும் உரிய பிதிர்க்கடன்களை"பித்ரு தோஷம்" இன்றைய தலைமுறை செய்வதில்லை. அதனால் ஏற்பட்டுப் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அத்தகையவர்கள் இந்த வேள்வியில் ஆகுதி கொடுப்பதன் மூலம் அந்த தோஷம் நீங்கும்.

யாக குண்டத்தில் வேள்விக் குச்சியும், நவதானியமும் செலுத்திவிட்டுப் பூசை முடிந்த பிறகு நீராடிவிட்டு அங்கப் பிரதட்சணம் வரவேண்டும். அதன்பிறகு கருவறைக்குப் பின்னாலே தியானம் செய்ய வேண்டும்.

ஓம்சக்தி

Tuesday, November 9, 2010

WHO IS NITHYA BRAHMACHARY? WHO IS NITHYA UPAVASI? KRISHNA EXPLAINS


Krishna - Nitya Brahmachari
Retold by P. R. Ramachander

One day Lord Krishna was playing with his queen Rukmani in the banks of Yamuna. Suddenly the Lord told her, "Rukmani, on the other shore of Yamauna, sage Durwasa has come and he is very hungry. Please prepare good food and take it to the sage”.

Rukmani immediately prepared a sumptuous food and packed it and came back to the shores of Yamuna. Then she told her lord, “Lord, The Yamuna is in floods and there is no boat or boatman in sight. How can poor me, cross this mighty river?”

Lord Krishna replied, “Dear Rukmani, that should not be any problem. Approach the river and tell the river that the Nitya Brahmachari (perennial bachelor) has asked her to give way to you. She will surely give you way”.

Rukmani was surprised and asked her Lord, “Lord, who is this Nitya Brahmachari and why am I not able to see him?”

The Lord replied, "Of course, Rukmani, it is myself”.

Rukmani was surprised. She could not understand how her husband who has seven other wives could call himself, Nitya Brahmachari. Anyway she decided to obey him. She went near Yamuna and told the river, “River Yamuna, my husband, the Nitya Brahmachari has asked you to give way to me, so that I can reach the other shore”.

The river immediately obliged. Rukmani crossed the Yamuna, met sage Durwasa, saluted him and served him the sumptuous food that she has brought with her. The Sage liked the food and became very happy and blessed her.
Then Rukmani told him, “Sir, I am very gratified by the blessing of the sage like you. Now I have to cross back the river Yamuna and join my husband. Can you please help me do it?”

Sage Durwasa replied, “Of course Rukmani, that is my pleasure and duty. Go to the river Yamuna and tell her that the Nitya Upavasi (He who never takes food) has asked her to give way to you. She will help you”.

Rukmani was taken aback. She thought how this sage who has just had a sumptuous feast can call himself Nitya Upavasi. She did not bother to ask him, because he was well known for his short temper. She went near the river and told her, “River Yamuna, now I have to cross you and reach the other shore. The Nitya Upavasi has asked you to give way to me”.

The river obliged and Rukmani crossed the river and joined her husband. Her face showed that she was terribly confused. She approached her lord and told him, “Lord, as per your direction I served good food and crossed back the river. I told her to give way as per the wishes of Nitya Upavasi. Strangely she did it”.

Lord Krishna laughingly replied, “I know Rukmani that you are terribly confused to see me calling myself as Nitya Brahmachari and the sage calling himself as Nitya Upavasi. We both were telling only the truth. This is because we both are realized souls and do not attach ourselves to this ethereal body of ours. We both know that we are really the souls within this body. That soul does not marry and does not take food and that is how I (my soul) am a Brahmachari and Sage Durwasa (his soul) is an Upavasi. Once you understand this simple truth, you can lead a very contended and happy life”.

http://www.celextel.org/storiesandanecdotes/krishnanityabrahmachari.html
(நான் ஒரு கதையை ஒரு பதிவிலே படித்தேன்.  மிக்க நன்றியுடன் நான் படித்த பதிவின் முகவரியைக் கொடுத்துள்ளேன்.  முடிந்தால் அனைவரும் படித்துப் பயன் பெறவும்.மிக அருமையான பதிவு.  வடமொழி தெரிந்த ஒரு வல்லுநர் கொடுத்த பதிவு.  நான் அதை மிகவும் இரசித்தேன்.  அதை மொழிமாற்றம் செய்து கொடுத்துள்ளேன்.  வால்மீகியி-ருந்து கம்பன் மாறுவது போல் வியாசரிடமிருந்து வில்-புத்தூர் மாறுவது போல் இயற்கையாக - இடத்திற்கு ஏற்ப இருப்பது தான் நல்ல மொழிமாற்றமாக இருக்க முடியும்.  இவர்கள் நால்வருமே எனக்கு மானசீக குருக்கள் தான்.  நான் தமிழில் பதிவினைத் தருவதால் சில மாற்றங்களோடு தந்துள்ளேன்.  படித்து இரக்கத் தான்.  எனவே கற்பனை இருந்தால் நல்லது என்ற எண்ணத்தோடு நடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பொறுத்தாற்றிக் கொள்ளவும்.)

ஒரு நாள் கண்ணனும் ருக்மணியும் யமுனை நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது யமுனையின் மறுகரையில் சினம் கொள்வதில் பெயர்பெற்ற முனிவர் துர்வாசர் பசியுடன் வந்து கொண்டிருந்தார்.  தமிழில் முனிதல் என்றால் கோபப்படுதல் என்று பொருள் கூட உண்டு.  ஒரு வேளை முனிவதால் இவர் முனிவரோ?  கண்ணனுக்குத் தான் வெளிச்சம். மாயக் கண்ணனுக்குத் தெரிந்து விட்டது துர்வாசர் பசியுடன் இருப்பது. 
உடனே ருக்மணியிடம் "பசியுடன் வரும் துர்வாசருக்கு அருமையான உணவு படைக்க வேண்டும்.  துரிதமாக அறுசுவை உணவை கொண்டு வா''  என்றார்.  கணவனின் சொல்லைத் தட்டாத ருக்மணி உடன் அரண்மனை சென்று அறுசுவை உணவைக் கொண்டு வந்தாள்.  ருக்மணி கண்ணனிடம்,"கண்ணாளா - யமுனையில் வெள்ளம் பெருகி ஓடுகிறது.  முனிவரே எதிர்கரையில்.  அதுவும் பசியுடன் உள்ளார் என்று கூறுகிறீர்கள்.  அருகில் படகோ படகோட்டியோ கூட காணவில்லை. எப்படி உணவை அவரிடம் சேர்ப்பது?'' என்று கேட்டாள். 
கண்ணன் உடனே ருக்மணியிடம், "இதில் ஒன்றும் கட்டமில்லை ருக்மணி. யமுனை நதிக்கரையில் நின்று நதியிடம் "நித்தியபிரம்மச்சாரி வழிவிடச் சொன்னான்' என்று கூறிப்பார்.  நதி வழிவிடும் என்றார்.  ருக்மணிக்கோ வியப்பு.  "இங்கே பிரம்மச்சாரி எங்கே உள்ளார்?   யாரும் இங்கே பிரம்மச்சாரி இல்லையே?  நீங்கள் தான் உள்ளீர்கள்.  நீரோ என்னுடைய கணவர்.  அதனால் நீங்கள் பிரம்மச்சாரியாக இருக்க முடியாது. யமுனையிடம் போய் பொய்யுரைக்க முடியுமா?'' என்றாள். இருப்பினும் கணவனின் வார்த்தைக்கு மறுவார்த்தை கிடையாது அந்த காலத்தில்.  எனவே நேரே யமுனை நதிக்கரைக்குப் போனாள். "யமுனாதேவியே - என் கணவர் கண்ணன் என்னும் பிரம்மச்சாரி வழிவிடச் சொன்னார்.  நான் மறுகரைக்குப் போகவேண்டும். வழிவிடு'' என்றாள்.  உடனே யமுனாநதி வழிவிட்டது.  ருக்மணியும் மறுகரைக்குப் போய் துர்வாச முனிவரை வழிபட்டு - வரவேற்று பசியாற்ற உணவு கொண்டு வந்துள்ளதாகக் கூறினாள்.  அவரும் யமுனை நதியில் குளித்து இறைவனைத் துதித்து உணவை உண்டு மகிழ்ந்தார்.  ருக்மணியை வாழ்த்தினார் .
ருக்மணி அவரை மீண்டும் வணங்கி, "முனிவரே - யமுனையில் வெள்ளம் போய்க் கொண்டு உள்ளது.  நான் மறுகரைக்குப் போக வேண்டும்.  நீங்கள் தான் இந்த நதியைக் கடந்து மறுகரைக்குச் செல்ல வழி கூறவேண்டும். அங்கு சென்று காத்துக்கொண்டிருக்கும் என் மன்னவன் கண்ணனைக் காணவேண்டும்.'' என்றாள்.
"அது ஒன்றும் பெரிய விடயமல்லவே - எனக்கு உணவு வழங்கிய உனக்கு அந்த உதவியை நான் செய்தே ஆகவேண்டும்.  யமுனை நதியிடம் சென்று "நித்ய உபவாசி (தினமும் உண்ணாதவன்) வழிவிடும்படி கூறினான்'' என்று கூறினால் யமுனா வழிவிடுவாள் என்றார் துர்வாசர்.  ருக்மணிக்கு மீண்டும் தலை சுற்றியது.  அறுசுவை உணவை வயிறு புடைக்க உண்டு நித்திய உபவாசி என்று தன்னை நினைத்துக் கொண்டு கூறுகிறாரே - தற்போதைக்கு இக்கரையில் இவரை விட்டால் வேறு யாரும் இல்லையே.  சரி முனிவர் கூறியதையே கூறிப்பார்ப்போம் என்று முடிவெடுத்தாள்.  அவ்வாறே நதிக்கரையில் நின்று "நித்திய உபவாசி வழிவிடச் சொல்கிறார்.  வழிவிடு'' என்று சொன்னாள்.  நதி வழிவிட்டது.
மறுகரைக்குச் சென்று கண்ணனனைப் பார்த்து,"கண்ணாளா நீங்கள் தான் மாயக் கண்ணன்.  பிரம்மச்சாரி என்று சொல்லச் சொன்னீர்கள் -  அந்த முனிவரோ அறுசுவை உணவை உண்டபின் தன்னை நித்ய உபவாசி என்று தன்னைக் கூறிக் கொள்கிறார்.  இருவரும் கூறுவது உண்மையல்ல என்பது திண்ணம்.  ஆனால் யமுனா நதியோ இதை நம்பி வழிவிடுகிறது.  எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.  தயவு செய்து எனக்கு விளக்க வேண்டும்'' என்றாள்.
கண்ணன் என்றும் மாறாத புன்னகையுடன் கூறினார். "நீ குழம்பி விடுவாய் - உனக்கு ஒன்றும் புரியாது என்பது எனக்குத் தெரியும் ருக்மணி.  நான் நித்ய பிரம்மச்சாரி என்பதும் அவர் நித்ய உபவாசி என்பதும் முக்காலமும் உண்மையே.  நாங்கள் இருவரும் உண்மையையே உரைத்தோம். ஏனெனில் நாங்கள் இருவரும் ஆன்மாவையே உண்மை என்று கருதுகிறோம்.  இந்த அற்ப உடலை உண்மையல்ல என்று கருதுகிறோம்.  இந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மா திருமணம் செய்து கொள்வதில்லை.  உறவுகளில் ஈடுபடுவதில்லை.  எல்லாம் இந்த பாழாய்ப்போன உடல் தான் செய்கிறது.  அதே போல் அவருடைய ஆன்மா உண்ணுவதில்லை.  அவரும் அவருடைய ஆன்மைவைத் தான் - தான் என்று - கருதுகிறார்.  இது மிக எளிதான விடயம்.  புரிந்து கொள்வதில் தான் உள்ளது நமது உண்மையான வாழ்க்கை.  இந்த உடலை நான் என்று நினைத்தால் எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்று தான் பொருள்.  இந்த பிறவியை பாழடிக்கிறார்கள் என்று பொருள்.  என்றும் மாறாதது ஆன்மா மட்டுமே.  அதற்கு இளமையில்லை - முதுமையில்லை.  நோய் இல்லை - உணவில்லை.  இன்பம் என்று கருதி நாம் செய்யும் தவறுகள் எல்லாம் இந்த பொய்யான உடலை நம்பித் தான்.  அழியக் கூடிய இது மெய் அல்ல.  பொய். புரிந்து கொள்.  யாருக்கும் தெரியாமல் நாம் தவறு செய்கிறோம் என்று கருதினால் உன் ஆன்மா சிரிக்கும்.  அது என்றும் உன்னைக் கவனித்துக் கொண்டே உள்ளது.  நல்லது செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.  கெட்ட செயல் செய்தாலும் அதற்காக ஒரு பிறவி உண்டு.  பிறவியின் தரம் தான் மாறும். புரிகிறதா? எனவே பற்றற்று வாழ வேண்டும்.  பலன் எதிர்பார்த்து வாழக்கூடாது.  பற்றில்லாமல் எந்த செயலையும் நாம் செய்தால் அந்த பலன் நமக்கு கிடையாது. உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மீண்டும் பிறவி உண்டு.'' என்றார் கண்ணன்.
        ஒன்றுமே புரியவில்லை இந்த உலகத்திலே என்று பாடிக்கொண்டே சென்று விட்டாள் ருக்மணிதேவி.